மோட்டார் சைக்கிளில் சிக்கிய சேலை: பெண் படுகாயம்

 

அராலி பாலத்திற்கு அண்மையில் இன்று திங்கட்கிழமை காலை பெண் ஒருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றில் பின்னால் இருந்து பயணித்த குறித்த பெண்ணின் சேலையானது மோட்டார் சைக்கிள் சில்லில் சிக்குண்டதால் அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்