மார்ச் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் திட்டம்

வெளி மாகாண தபால் நிலையங்களில் இரவு வேளைகளில் தண்டப்பணம் செலுத்தும் வசதி விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெளி மாகாணங்களில் உள்ள தெரிவு செய்யப்பட்ட தபால் நிலையங்களில் இரவு வேளைகளில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான தண்டப்பணம் செலுத்தும் வசதியை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை மேல் மாகாணத்திலுள்ள 13 தபால் நிலையங்களில் அபராதம் செலுத்தும் வசதி இரவு வேளைகளிலும் காணப்படவதாக அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்