
சிறையிலிருந்த கணவரை பார்க்க சென்ற மனைவி 7 மாத குழந்தையுடன் கைது
களுத்துறை மாவட்டத்தில் சிறையிலிருந்த கணவருக்கு போதை பொருள் வழங்கிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
வாதுவ, வெரகம, அல்விஸ்வத்த பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த பெண் கணவருக்கு வழங்குவதற்காக காற்சட்டை பொக்கெட்டுக்குள் ஹெரோயினை மறைத்துவைத்திருந்தபோது பொலிஸாரால் அவதானிக்கப்பட்ட நிலையில் 7 மாதக் குழந்தையுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன் போது இவரிடம் இருந்து 2500 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
