அணுவாயுத தாக்குதலை எதிர்கொள்ள இலங்கை தயார்

அணுவாயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர் கொள்ள இலங்கை தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அணுவாயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அதனால் ஏற்படும் கதிரியக்க நிலைமைகளை எதிர்கொள்ள இலங்கை தயாராக இருப்பதாக அணுசக்தி ஒழுங்குமுறை சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் கண்காணிப்பு குழு கூடிய போது அதிகாரிகள் இதனை தெரிவித்தனர்.

இதற்குத் தேவையான மனித வளங்களும், தேவையான உபகரணங்களும் தங்களிடம் இருப்பதாக அணுசக்தி ஒழுங்குமுறை சபையின் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்