பிலிப்பைன்ஸில் லொறி விபத்து: 15 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸி லொறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

நீக்ரோஸ் ஒரியண்டல் மாகாணத்திலுள்ள நெடுஞ்சாலையில் சென்ற லொறியொன்று மபினாய் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் சாலையில் நடந்து சென்றவர்கள் உட்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் மேலும் படுகாயம் அடைந்த சிலருக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்