
பெரியப்பாவால் 11 வயது சிறுமி வன்கொடுமை
மொனராகலை பகுதியில் 11 வயதும் 10 மாதங்களுமான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், அவருடைய பெரியப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.
மெதகம பொலிஸ் பிரிவில் ரத்தனதெனிய ஹொகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 11 வயதும் 10 மாதங்களுமேயான சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த வீட்டில் ஒருவர் திருடுவதற்கு மறைந்துள்ளார் என்பது தொடர்பில் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு வந்த அயலவர்கள், அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 15 வயதான சிறுமியுடன் காதல் உறவை கொண்டிருப்பதால் அந்த வீட்டுக்குச் சென்றதாகவும், அச்சிறுமியை எவ்விதமான தொந்தரவுக்கும் உட்படுத்த வில்லையென பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அச்சிறுமி, அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில் 2019 ஆம் ஆண்டில் இருந்து தன்னுடைய பெரியப்பா, அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார். எனினும், வெளியில் சொன்னால், இரு வீட்டாருக்கும் இடையில், பிரச்சினை ஏற்படும் என்ற பயத்தால், வெளியில் சொல்லவில்லை என்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஹொகொல்ல ரத்தனதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ‘சமந்த” என்றழைக்கப்படும் பெரியப்பாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரை பிபில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த மெதகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
