மட்டக்களப்பிற்கு வரும் வெளிநாட்டு பறவைகள் வேட்டையாடப்படுவதாக குற்றச்சாட்டு

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏத்தாழைக்குள பறவைகள் சரணாலயத்தில் சஞ்சரிக்கும் வெளிநாட்டு பறவைகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளன

டிசம்பர் – ஏப்ரல் காலப்பகுதியில் இவ்வாறு பிரமிக்கதக்க இந’த பறவை இனம் குறிப்பாக இவ் ஈரநிலப்பிரதேசத்தில் தொடர்சியாக வீசப்படுகின்ற குப்பைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

இவ்வாறான குப்பைகளை இப்பறவைகள் உண்பதால் இறந்து அழியும் அபாயகரமான சூழல் காணப்படுகிறது.

மேலும் மிகப்பிரதானமான பிரச்சினை இப்பறவை இனம் இறைச்சிக்காக அதிகளவில் வேட்டையாடப்படுகின்றன.

உள்ளுர் மற்றும் வெளியூர் மனித விசமிகள் இதனை அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்வதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.