மட்டக்களப்பில் சவப்பெட்டிகளுடன் 2 இளைஞர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்

செங்கலடி பிரதேச செயலகத்திற்கு அருகில் இன்று திங்கட்கிழமை காலை இரண்டு இளைஞர்கள் சவப்பெட்டிகளுடன் சாகும்வரை உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது கல், மண், கிறவல் என்பவற்றை அகழ்வதற்கு சட்டப்படியான ஆவணம் இருந்தும் ச. வியாழேந்திரன் சிபாரிசு செய்யும் நபர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வியாழேந்திரனை ஏறாவூர் பற்று பிரதேச தலைவர் பதவியில் இருந்து அகற்றுமாறும் கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு ஆளாகமல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், செங்கலடி பிரதேச செயலாளரும் சட்டப்படி தமது கடமைகளை புரியுமாறு இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.