
மன்னார் – தலைமன்னார் பகுதியில் 10 வயதுடைய சிறுமியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை இன்று திங்கட்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றில் மீண்டும் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பொதுமக்கள் குறித்த நீதிமன்றத்துக்கு முன்பாக சம்பவத்தை கண்டித்தும் சந்தேகநபருக்கு எதிராகவும் பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
10 வயதுடைய குறித்த சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடந்த சனிக்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய அவரை 48 மணிநேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதவான் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
