
சிவனொளிபாத மலை யாத்திரைக்கு பயணித்தவர்களுக்கு நேர்ந்த கதி
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை – மில்லகஹமுல்ல பிரதேசத்தில் இன்று ஞாயிற்று கிழமை சிவனொளிபாத மலை யாத்திரைக்குப் பயணித்த வேனும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
வேன் முன்னால் சென்ற லொறியை முந்திச் செல்ல முற்பட்ட போது கம்பஹாவிலிருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றி சென்ற வேனும் மாத்தறையிலிருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்தும் இவ்விபத்தில் சிக்கியுள்ளன.
இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக கினிகத்தேனை வைத்தியசாலையிலிருந்து நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்தில் வேனும் பேருந்தும் பலத்த சேதமடைந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
