கல்லாறு சதீஷ் தலைமையில் சுவிஸ் தலைநகரில் அருந்தவராஜாவின் ஐந்தாவது நூலின் வெளியீடு இடம்பெற்றது
சர்வதேசத் தலைநகரான ஜெனிவாவில் வசிக்கும் விரிவுரையாளர் , கல்வியாளர் அருந்தவராஜாவின் ஐந்தாவது “புலம்பெயர் தமிழர் வலியும் வரலாறும் ” எனும் நூலின் அறிமுக விழா சுவிஸ் தலைநகர் பேர்னில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
அருந்தவராஜா எழுதிய இந்த ஐந்து நூல்களும் தொடர்ச்சியாக சுவிஸ் தமிழ் எழுத்தாளர் கலாநிதி நாகேஸ்வரன் அருள்ராசா(கல்லாறு சதீஷ்) தலைமையிலே வெளியீடு செய்யப்பட்டது.
பேர்ண் வள்ளுவன் தமிழ் பள்ளியும், யாழ் பல்கலைக்கழக 85/86 கால மாணவர்களும்,பேர்ண் சிவன் கோயில் தமிழ் களரி மண்டபத்தில் நடாத்திய நூல் அறிமுக நிகழ்வுக்கு சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் நிறைந்து வந்து நூலினைப் பெற்றுக்கொண்டு தமிழ் வளர்ச்சிக்கு துணை செய்தனர்.
ஆங்கில நூல் ஆசிரியரும், ஆங்கிலத்திரைப்பட இயக்குனருமான கார்த்திக் இராமக்கிருஷ்ணன், நூலாசிரியர் ஜெயக்கொடி ஆகியோர் மதிப்புரைகளை வழங்கினார்கள். வரவேற்புரையை தாமரைச் செல்வனும்,வாழ்த்துரையை பூநகரி முருகவேள் ஆசிரியரும் நிகழ்த்தினர்.
நூலாசிரியர் சண் தவராஜா, கலையுயிர் வாவி.பாஸ்கர், வித்தகன் சுரேஷ் செல்வரட்ணம், பிராங்போட் வர்த்தகர் இராமேஸ்வரன் ,சிவருசி சசி தர்மலிங்கம் ஆகியோர் சிறப்புரைகளை வழங்கினர்.
இந்த நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக சீனத் தமிழாளர் நிறைமதி வருகை தந்து சீனாவுக்கும் தமிழர்களுக்குமான வரலாற்றுத் தொடர்புகளை எடுத்துரைத்தார்.
கவிஞர் இன்பம் அருளையாவின் பாடல்களும்,திருமதி குளோரியா ரூபாவின் கவிதையும்,பொன்னம்பலம் அவர்களின் பாடலுமாக விழா சிறப்புற நடைபெற்றது.
வேலா கிறடிற் உரிமையாளர் வரதன் விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்வினை செல்வி கார்த்திகா, நெதர்லாந்து தயாமோகன் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.