நோயாளர் காவு வண்டி மோதியதில் வர்த்தகர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நோயாளர் காவு வண்டி மோதியதில் படுகாயமடைந்த வர்த்தகர் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி- அல்வாய் பகுதியை சேர்ந்த சண்முகதாஸ் தர்மதாஸ் (வயது – 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ். நகர் பகுதியில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வந்த குறித்த நபர் தனது வர்த்தக பணிகளை முடித்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, ஆனைப்பந்தி சந்திக்கு அருகில் நோயாளர் காவு வண்டியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் படுகாயமடைந்தவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்