
பாடசாலையில் மயங்கிய மாணவர்கள்: ஒருவரின் நிலை கவலைக்கிடம்(update)
குருநாகலை – மாதுராகொட பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் 4 மாணவர்கள் போதை மாத்திரையை உட்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குருணாகல் பகுதியில் தரம் 5 கல்வி கற்கும் மாணவர் தனது தந்தை வீட்டில் மறைத்து வைத்திருந்த போதை மாத்திரைகளை பாடசாலைக்கு கொண்டுவந்து சக மாணவர்களுடன் அவர் உட்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் குறித்த மாணவனின் தந்தையே கைத செய்யப்பட்டு நேற்றைய தினம் சனிக்கிழமை குருணாகல் நீதவானிடம் முன்னிலைப்படுத்தியதுடன், அவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
