திருகோணமலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

திருகோணமலை – குறிஞ்சாக்கேணி மாகாத் நகர் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமை நிலையிலுள்ள குடும்பங்களுக்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீகினால் நிவாரண உதவிகள் நேற்று சனிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.

குறித்த உதவிகள் எம்.எஸ் தௌபீகின் கோரிக்கைக்கமைவாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானுடைய பரித்துரையின்கீழ் எல்.ஐ.ஓ.சி(LIOC) நிறுனத்தின் அனுசரனையில் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் எல்.ஐ.ஓ.சி நினுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ், முன்னாள் கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர்களான ஜவாதுல்லா, சனூஸ் மற்றும் எல்.ஐ.ஓ.சி நிறுவனத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்