சிவராத்திரி போட்டி நிகழ்ச்சி

-மூதூர் நிருபர்-

திருகோணமலை – திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையினால் சிவராத்திரி பெருவிழாவினை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட மாணவர்களிடையே போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தப்படுகின்றது.

அந்த வகையில் மூதூர் கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சிவராத்திரி விழாவை முன்னிட்ட பன்னிசை,பேச்சுப் போட்டிகள் இன்று சனிக்கிழமை காலை தி/மூ/பட்டித்திடல் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கீழ் பிரிவு, மேல் பிரிவு என இரண்டு பிரிவுகளில் இப் போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இப் போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றிபெறும் மாணவ மாணவிகளுக்கு பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்