ஆண்களுக்கு இலவச பேருந்து சேவை?

பெண்களுக்கு வழங்குவது போல், ஆண்களுக்கும் இலவச பேருந்து சேவை வழங்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் மகளிா் கல்லூரி சமூகவியல் துறை, பசுமை தாயகம் அமைப்பு ஆகியவை சாா்பில் ‘பாலின சமநிலையும் காலநிலை நீதியும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

மேலும் இந்த நிகழ்வில்  காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பாலைவனம் இல்லாத சீனாவின் தலைநகா் பீஜிங்கில் புழுதி புயல்கள் உருவாகின்றன, இதனால் அங்கு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கல்லூரி மாணவிகள் ஒருங்கிணைந்து இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும், இந்த விழிப்புணா்வு அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தி சட்டங்களை உருவாக்க வழி வகுக்கும்.

அடுத்த 40, 50 ஆண்டுகளில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி அருகே கடல் வந்துவிடும்; அந்த அளவுக்கு வேகமாக காலநிலை மாற்றம் நடைபெற்று வருகிறது. கடுமையான வறட்சி, வெள்ளம், புயல் என இனி அடிக்கடி கேட்கும் அளவுக்கு மோசமான கால நிலையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். எனவே, நாம் இதிலிருந்து விழித்துக் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கருத்துரைகள் நிகழ்த்தப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்