விபத்தில் மாணவன் உயிரிழப்பு

பாணந்துறை, மித்தெனிய – வலஸ்முல்ல பிரதான வீதியில் நேற்று புதன் கிழமை மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.

வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்

குறித்த மாணவன் தனது 2 நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் வீதிக்கு அருகாமையில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த ஏனைய இருவரும் எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்