
தான் இறக்குமதி செய்த மருந்துகளையே அருந்தும் கெஹலிய ரம்புக்வெல்ல
கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு அவர் சுகாதார அமைச்சராக இருந்த போது நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட மருந்துகளே அவரது சிகிச்சைக்காக பயன்படுத்துவதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சராக செயற்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.இவ்வாறு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளே அவரது சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
