ரயில் தடம் புரண்டதால் பாதிக்கப்பட்ட சேவை

மலையக ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக மலையக ரயில் மார்க்கத்தில் இயங்கும் ரயில்கள் தாமதத்துடன் இயக்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உடரட்ட மெனிகே கடுகதி ரயில் உலப்பனை ரயில் நிலையத்தில் தடம் புரண்டுள்ளதாக அந்த திணைக்களம் கூறியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்