ஆவா குழு தொடர்பில் வெளியான தகவல்

யாழில் வாள்வெட்டு, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் ஆவா குழுவினை இயக்குபவர்கள் ஐரோப்பாவில் வசிப்பதாக தெரியவந்துள்ளது.

வெளிநாடு செல்வதற்காக கொழும்பு வலான பிரதேச வீடொன்றில் தங்கியிருந்தபோது மல்லாகத்தைச் சேர்ந்த குறித்த ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையிலே குறித்த விடயம் தெரிய வந்துள்ளது.

அந்த குழுவில் இரண்டு வருடங்களாக அங்கத்தவராக இருப்பதாக அவர் பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதேவேளை, ஆவா குழுவின் இலச்சினையில் உள்ள ‘001’ என்ற எண்ணுக்கான விளக்கம் தனக்கு எதுவும் தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இலச்சினையை உருவாக்கியவர்கள் சன்னா மற்றும் தேவா என்ற இருவரே எனவும் அவர்கள் இப்போது வெளிநாட்டில் வசிக்கிறார்கள் எனவும் சந்தேகநபர் கூறியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்