
திருகோணமலையில் கொத்துவேலி கவிதை நூல் வெளியீடு
-கிண்ணியா நிருபர்-
நீலையூர் சுதா எழுதிய கொத்துவேலி கவிதை தொகுப்பின் வெளியீடு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை நகராட்சி மன்ற மண்டபத்தில் 7 ஆம் திகதி மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.
எழுத்தாளரும் கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் பணிப்பாளருமாகிய ச.நவநீதன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், வரவேற்புரையை எண்ணம் போல்வாழ்க்கை இலக்கிய மன்றத் தலைவர் எழுத்தாளர் கனகதீபகாந்தனும், நூலாசிரியர்பற்றி சமூகசேவைத்திணைக்கள மாகாணப் பணிப்பாளர் எழுத்தாளர் இரா.கி.இளங்குமுதனும், நூல்பற்றிய சிறப்பு நயவுரையினை ஓய்வுநிலை அதிபர் கவிஞர் இரா. இரத்தினசிங்கமும் வழங்குவார்கள்.
எண்ணம்போல் வாழ்க்கை இலக்கியமன்றத்தின் ஒருங்கமைப்பில், திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளரும் எழுத்தாளருமான சூ.பார்த்தீபன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.
இந்நிகழ்வில் பிரதமசெயலாளர், அரசாங்க அதிபர்,அனைத்து கிழக்கு மாகாணசபைச் செயலாளர்கள், பிரதிப்பிரதம செயலாளர்கள், திருமலை வளாக முதல்வர் ஆகியோர் அதீதிகளாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
