
பேருந்தை முந்தி செல்ல முற்பட்ட வாகனம் விபத்து: 6 பேர் படுகாயம்
கேகாலையில் இன்று ஞாயிற்று கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கிவுல பிரதேசத்தில் தங்காலை ஹம்பாந்தோட்டை பிரதான வீதியில் பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் பயணிகள் பேருந்தை நிறுத்திய போது, பின்னால் வந்த வான் நிறுத்த முடியாமல் பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட போது, எதிரே வந்த காருடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் வாகனங்கள் பலத்த சேதமடைந்ததுள்ளதுடன் 6 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
