பழம் பறிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

கம்பஹா மேற்கு பத்பேரிய – வடப்பிட்டிய பிரதேசத்தில் தனியார் காணியில் இருந்து ஆணின் சடலம் துரியன் மரம் ஒன்றிற்கு அருகில் காலில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.

வடப்பிட்டிய – பரகடுவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த காணியின் உரிமையாளர் துரியன் பாதுகாப்பிற்காக மின்சார வேலி அமைந்துள்ள நிலையில் குறித்த மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் காணி உரிமையாளரான 51 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்