உலக ஈரநில தினத்தை முன்னிட்டு மரநடுகை

-சம்மாந்துறை நிருபர் ABM.ஷிஹாப் ஆகில்-

உலக ஈரநில தினத்தை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை ஈரநில பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

சுற்றாடல் நேயன் அமைப்பு மற்றும் கல்முனை பிரதேச செயலக வடக்கு பிரிவு இணைந்து சுற்றாடல் முன்னோடி மாணவர்களின் பங்கேற்புடன் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் வழிகாட்டலின் கீழ் பாண்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு பின்புற ஈரநில பகுதியிலேயே இந்த மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்த நிகழ்வில் சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி. புஷ்பராஜினி செவ்வேட்குமரன் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு மரங்களை நட்டனர்.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்