பொலிஸாரை சரமாரியாக தாக்கிய கும்பல்

யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது சில நபர்கள் இணைந்து  தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் குழுவாக நின்றவர்களை சோதனையிட இரண்டு பெலிஸார் முயன்ற போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை தாக்குதலுக்குள்ளான மானிப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகத்தரும் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்