
தமிழரசுக்கட்சியின் செயலாளர் தெரிவு : திருகோணமலையில் குழப்பநிலை
திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டு குழப்ப நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது
மத்தியகுழுவால் இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளராக திருகோணமலை மாவட்ட உறுப்பினர் குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக செயலாளர் பதவி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது செயலாளராக குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த தெரிவுகள் தொடர்பாக பொதுச்சபையில் அறிவித்தபோது, அதை உறுப்பினர்கள் ஏற்கவில்லை எனவும் பாரிய வாதப்பிரதிவாதங்ஙள் இடம்பெற்று அங்கு குழப்பமான சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் செயலாளர் பதவிக்கான வாக்கெடுப்பு நிகழவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
