காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் கார் மீட்பு: பிக்கு கொலையுடன் தொடர்பு

கொழும்பு பகுதியில் உள்ள காட்டு பகுதியிலிருந்து முழுவதுமாக தீக்கிரையாகிய நிலையில் கார் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பிக்கு ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபர்கள் பயணித்ததாக கூறப்படும் காரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், சந்தேகநபர்கள் தப்பி சென்ற காரின் இலக்கமான சீ.ஏ.ஓ-5345 என்ற இலக்கத்தை கொண்ட வெள்ளை நிற மோட்டார் வாகனமொன்று பாணந்துறை எலுவில பிரதேசத்தில் உள்ள வாகன திருத்துமிடத்தில் இருந்து கண்டுபிடித்துள்ளனர்.

கம்பஹா, மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை வளாகத்திற்குள் மோட்டார் வாகனத்தில் நுழைந்த நான்கு சந்தேக நபர்கள் அங்கிருந்த தேரர்களிடம் இங்கு ஜாதகம் பார்க்கும் தேரர் யார் என வினவியுள்ளனர்.

இதன்போது, சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் என்று கூறி துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றதாக விகாரையின் தேரர் ஒருவர் தெரிவித்தார்.

துப்பாக்கி குண்டுகள் அவரது இடது கை மற்றும் மார்பில் தாக்கியதுடன், காயமடைந்த தேரர் உடனடியாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்