நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மாற்றுவது என்பது வெறும் சுலோகம் மாத்திரமே

-கொழும்பு-

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மாற்றுவது என்பது வெறும் சுலோகம் மாத்திரமே என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய கூறியிருக்கிறார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் அறிவிப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த சியாம்பலப்பிட்டிய ஒவ்வொருவரும் நடைமுறைச் சாத்தியமற்ற அறிக்கைகளை வெளியிடுவதை விடுத்து தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

அவிசாவளையில் ஞாயிறன்று கூட்டம் ஒன்றுல் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், நாடு பெரும் நெருக்கடியை எதிர் நோக்கிக்கொண்டிருந்த ஒரு நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையானது. கெடுதியானது அல்ல.

அந்த உடன்படிக்கையை மாற்றப்போவதாக வெளியிடப்படுகின்ற அறிக்கைகள் எல்லாம் அப்பாவி மக்களையும் கட்சி ஆதரவாளர்களையும் ஏமாற்றும் நோக்குடனானவை அவ்வாறு செய்வதன் மூலம் தங்கள் ஆதரவைப் பெருக்கலாம் என்று நினைப்பவர்கள் நாட்டுக்கு எந்த நன்மையையும் செய்யப்போவதில்லை என்று குறிப்பிட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்