
பெலியத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : 5 பேர் உயிரிழப்பு
மாத்தறை – பெலியத்தை பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளதாகபொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி 4 பேர் உயிரிழந்துடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
