
“பரோட்டா” இல்லை: தம்பதியினர் மீது தாக்குதல்
பாதுக்க பகுதியில் இருவர் உணவகத்தை நடத்தி வந்த தம்பதியினரை தாக்கி ஹோட்டலையும் சேதப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பாதுக்க – அங்கம்பிட்டிய பிரதேசத்திலுள்ள உணவகத்திற்கு கடந்த வியாழக்கிழமை சென்ற இருவர் இரவு உணவுக்காக கொத்து ரொட்டியை வழங்குமாறு கூறிவிட்டு, சிறிது நேரம் கழித்து ‘கொத்து ரொட்டி வேண்டாம் பரோட்டா வேண்டும்’ என கூறியுள்ளனர்.
பரோட்டா ரொட்டி தீர்ந்துபோனதால் உரிமையாளர் அவர்களிடம் பரோட்டா ரொட்டி முடிந்து விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து குறித்த இருவரும் உணவக உரிமையாளர்களான தம்பதியினரை தாக்கிவிட்டு ஹோட்டலையும் சேதப்படுத்தியுள்ளனர்.
தாக்குதல் காரணமாக தம்பதியினர் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து உடனடியாக வெளியேறி பாதுக்க பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
அதன் பின்னர், சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றைய சந்தேக நபர் உணவக உரிமையாளர் தன்னை தாக்கியதாக கூறி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
