உயர்தர பரீட்சையில் மாணவர்களுக்கு ஏற்பட்ட அநீதி: பெற்றோர்களின் ஆதங்கம்

காலி பிரதேசத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மத்திய நிலையத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கணக்கியல் முதலாம் வினாத்தாளுக்கான கணிப்பான் பாவனையின் போது மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்கள் வினாத்தாளுக்கு விடையளிக்கும் போது, ​​அவர்களின் கணிப்பான்களை பரிட்சை நிலைய பொறுப்பதிகாரி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

பரீட்சார்த்திகள் சிலர் பரீட்சை மண்டபத்திற்குள் அங்கீகரிக்கப்படாத கணிப்பான்களை கொண்டு வந்தமையே இதற்குக் காரணம் எனவும் கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஒரு மணி நேரத்திற்கு பிறகு பரீட்சை எழுதியவர்களுக்கு மீண்டும் கணிப்பான்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கணிப்பான்களை மீண்டும் தெரிவு செய்ய சில நிமிடங்கள் எடுத்துள்ளதாகவும், விடை எழுத நிலைய பொறுப்பதிகாரி மேலதிக நேரத்தை வழங்கவில்லை எனவும் மாணவர்களின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்