தென்கிழக்கு பல்கலைக்கழத்தில் தொடரும் சுத்திகரிப்பு பணி

அண்மையில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கின் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் சில பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. இதில் பௌத்த, இந்து மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களும் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்தன.

மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தலைமையில் இரண்டாது நாளாகவும் சுத்திகரிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த சுத்திகரிப்புப் பணியில் அக்கரைப்பற்று மாநகரசபையின் தீ அணைப்பு பிரிவும் இணைந்து கொண்டது. இன்றைய நிகழ்வில் பௌத்த, இந்து மற்றும் கிறிஸ்த்தவ தேவாலயங்கள் ஊழியர்களால் சுத்தம் செய்யப்பட்டன.

சுத்திகரிப்புப் பணிகள் இடம்பெற்றுவரும் அதேவேளை சேதங்கள் தொடர்பில் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்பட்டால் கையாளவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் கருத்து வெளியிட்டார். அத்துடன், சேதங்கள், மீள் கட்டுமானம் மற்றும் எதிர்கால அனர்த்த தவிர்ப்பு திட்டவரைபுகள் தொடர்பிலும் விரைவில் சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் சுத்திகரிப்பு பணிகளில் இன்றும் மிகுந்த சிரத்தையுடன் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்