பிரதான ரயில் சேவைகள் பாதிப்பு

பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரதான ரயில் மார்க்கத்தில் இன்று வியாழக்கிழமை காலை முதல் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலே அம்பேபுஸ்ஸ ரயில் நிலையத்திற்கு அருகில் தொழினுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காரணமாக குறித்த மார்க்கத்தின் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்