
மட்டு கல்லடி பகுதியில் வாகன விபத்து
மட்டக்களப்பு கல்லடி பேச்சியம்மன் கோவிலுக்கு அருகில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வாகன விபத்து இடம்பெற்றுள்ளது.
காருடன் முச்சக்கர வண்டி மோதியே விபத்து இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் முச்சக்கர வண்டி மற்றும் கார் பலத்த சேதம் அடைந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மற்று போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
