சிறைச்சாலை காவலர்கள் இருவர் போதைப்பொருளுடன் கைது

கடுகன்னாவ பகுதியில் இரண்டு சிறைச்சாலை காவலர்கள் போதைப்பொருளுடன் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொத்மலை மற்றும் ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் வசிக்கும் பல்லேகல தும்பர சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை காவலர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கண்டி பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரசிக சம்பத்தின் பணிப்புரையின் பேரில் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் திலக் சமரநாயக்க உள்ளிட்ட குழுவினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்