மட்டக்களப்பில் களை இழந்த பொங்கல் வியாபாரம்

மட்டக்களப்பு பகுதியில் வீதிகளும் சந்தைகளும் மக்கள் நடமாட்டம் இன்றி களையிழந்து காணப்படுகின்றன.

தை திருநாள் நாளை திங்கட்கிழமை பிறக்கவுள்ள நிலையில் இன்றைய தினம் ஞாயிற்று கிழமை வீதி ஓரங்களிலும் மட்டக்களப்பு பிரதான சந்தையிலும் கடைகளில் பொருட்கள் குவிக்கப்பட்டு உள்ள நிலையிலும் கூட மக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகின்றது.

கடந்த காலங்களில் பெய்து வரும் கடுமையான மழை காரணமாகவும் நாட்டில் அதிகரித்துள்ள வரி நிலமையினாலும் பொருட்களின் விலை உச்சம் தொட்டுள்ளது.

இதன் போது கருத்து தெரிவித்த மக்கள் “தாங்கள் அன்றாடம் வேலை செய்து பெறும் ஊதியம் 2000 ரூபாவாக காணப்படம் நிலையில் அந்த பணத்தில் மூன்று மரக்கறி கூட வாங்க முடியவில்லை” என கவலை வெளியிட்டுள்ளனர்.

இதே வேளை வியாபாரிகள் கருத்து தெரிவிக்கையில் “தாங்கள் மரக்கறிகளை அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்வதாகவும் இவற்றினை விற்பனை செய்வதில் கடுமையான சிக்கலை எதிர் கொண்டுள்ளதாகவும் மக்கள் தங்களுடைய கொள்வனவு செய்யும் ஆற்றலை குறைத்துள்ளதாகவும்” கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும் பொங்கல் பானைகள் கூட மிகவும் குறைந்த அளவிலேயே மக்கள் கொள்வனவு செய்வதாக மட்பாண்ட வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்