
விஜயகாந்துக்கு சாணக்கியன் அஞ்சலி
எம் மக்கள்மீது அளவுகடந்த அன்பு கொண்ட புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை கோயம்பேடு பகுதியில் இருக்கும் அவரது கட்சி அலுவலகத்திற்கு சென்று வட கிழக்கு மக்கள் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அஞ்சலி செலுத்தினார்.
இதன் போது இரா.சாணக்கியன் அங்குள்ள ஊடகங்களுக்கு ஆற்றிய உரையில் “விஜயகாந்த் 80 மற்றும் 90 ஆண்டு காலப்பகுதியில் தமிழ் ஈழ போராட்டத்துக்கு மிக முக்கிய ஆதரவு வழங்கியவர்களில் மிக முக்கியமான ஒருவர். எமக்கான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியானவர். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் எனில் அவரது ஆதரவாளர்கள் ஈழத் தமிழர்களுடன் மற்றும் ஈழ தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து இவ் போராட்டத்துக்கு வலு சேர்க்க வேண்டும்” என்று கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
