மட்டு கோட்டைக்கல்லாறு நூலகத்துக்கு நூல்களை அன்பளிப்பாக வழங்கினார் கவிஞர் வைரமுத்து

இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள கோட்டைக்கல்லாற்றில்  இயங்கும் நூலகத்துக்கு கவிப்பேரரசு வைரமுத்து தான் எழுதிய ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்பாக வழங்கினார்.

கவிப்பேரரசை அவரது இல்லத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சென்று சந்தித்த வேளை கோட்டைக்கல்லாறு நூலகத்துக்கான புத்தகங்களின் தேவையை கவிப்பேரரசுக்கு எடுத்து சொல்லப்பட்டது.

அதனைக் கேட்டு அவர் எழுதிய நூல்களின் தொகுதி ஒன்றை கோட்டைக்கல்லாறு நூலகத்திற்கு வழங்கினார்

இதன்போது கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் இலங்கையின் எழுத்தாளரும் புலம்பெயர் தமிழருமான  கல்லாறு சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.