தைப்பொங்கல் தினத்தன்று மதுபானசாலைகளுக்கு பூட்டு

தைப்பொங்கல் தினத்தன்று, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் மதுபானசாலைகளை மூடுவதற்கு மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

தைப்பொங்கல் தினமானது தமிழர்கள் நன்றிபகிரும் நாளாகும். அன்றைய நாள் புனிதம் மிக்கதாகும். ஆகவே தமிழ் மக்கள் செறிந்து வாழும் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் தைப்பொங்கல் தினத்தன்று மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் உத்தியோக பூர்வமாக விடுத்திருந்த கோரிக்கைக்கமையவே மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மேற்படி தீர்மானத்தை உறுதிப்படுத்தியிருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்