சீருடைக்குள் போதைபொருள்: சிறைச்சாலை உத்தியோகஸ்தர் கைது

சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

பல்லேகல சிறைச்சாலையில் கடமையாற்றும் அதிகாரியே இவ்வாறு கைதாகியுள்ளார்.

சந்தேக நபர் பல்லேகல தும்பர சிறைச்சாலையில் கடமைக்காக சென்ற போது சீருடையில் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்துக் கடத்திய நிலையியே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து 25,000 ரூபா பெறுமதியான இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், இரண்டு சிம் அட்டைகள், சிறைச்சாலைச் சீருடை மற்றும் சிறைச்சாலை அடையாள அட்டை என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் மெலதிக விசாரணைகளின் பின்னர் நீதி மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்