
யாழில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – நல்லூர் சட்டநாதர் கோவில் பகுதியில் முதியவரொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
விஸ்வநாதப்பிள்ளை யோகேந்திரன் என்ற 62 வயதானவரே இவ்வாறு நேற்று வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் இன்று சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், தடயவியல் பொலிஸார் உள்ளிட்டோர் விஜயம் செய்து பார்வையிட்டு விசாரணையில் ஈடுபட்டனர்.
உயிரிழப்பு இடம்பெற்று சில தினங்களாகி இருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் மகன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலுக்கமைய சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலையா தற்கொலையா என்பது விசாரணைகளின் பின்னரே தெரியவரும் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்




