மட்டக்களப்பு உன்னிச்சை பகுதியில் பேருந்து விபத்து

மட்டக்களப்பு உன்னிச்சை பகுதியில் இன்று திங்கட் கிழமை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

உன்னிச்சையில் இருந்து வவுணதீவு ஊடாக மட்டக்களப்பு நோக்கிய பயணத்த பேருந்தே வவுணதீவு 3 கட்டை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் யாருக்கும் பெருமளவு பாதிப்பு இல்லை என்பதுடன் சிலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்