
கிழக்கு மாகாணத்தில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி
இலங்கையின் முதன்முதலாக கிழக்கு மாகாணத்திலே பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி திருகோணமலை சம்பூர் பொதுவிளையாட்டு மைதானத்தில் கிழக்கு ஆளுநர் தலைமலையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கிழக்கு மாகாணத்தில் பொங்கல் விழா நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 4, 7, 8 ஆகிய மூன்று நாட்களும் பொங்கல் விழா நிகழ்வுகள் இடம்பெறவிருக்கின்றன.
அதில் ஜல்லிக்கட்டு சிலம்பாட்டம் ரங்கோலி படகுப்போட்டி பரதநாட்டியம் மாட்டுவண்டி சவாரி பொங்கல் விழா என தமிழர் பாரம்பரிய பண்பாட்டு விளையாட்டுகளும் நிகழ்வுகளும் இடம்பெறவிருக்கின்றது
எனினும் தை பிறக்க முன்பே மார்கழியில் தழிழர் திருநாளாம் தைத்திருநாள் கொண்டாட்டங்களை நிகழ்த்துவது முறையற்றது என கிழக்கு மாகாண பொங்கல் விழாவிற்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

