
மட்டக்களப்பில் புதிய அஞ்சல் அலுவலகம் திறந்து வைப்பு
தற்போது ஜனாதிபதியாக உள்ள ரணில் விக்கிரம சிங்க 2019 ஆம் ஆண்டு பிரதமராக இருக்கும் போது 45 கோடி ரூபா செலவில் புதிய அஞ்சல் அலுவலகம் நிறுவும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு புளியந்தீவு பகுதியில் பழைய அஞ்சல் நிலையத்திற்கு முன்பாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவினால் புதிய அஞ்சல் அலுவலகம் ஒன்று இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் திறந்து வைக்கும் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் “தற்போது ஜனாதிபதியாக உள்ள ரணில் விக்கிரம சிங்க 2019 ஆம் ஆண்டு பிரதமராக இருக்கும் போது 45 கோடி ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு 2019 பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது. எனினும் இதனை கட்டி முடிப்பதற்கான போதியளவு நிதி வசதி இல்லாததன் காரணத்தால் நீண்டகாலத்தின் பின்னர் தற்போது இதன் கட்டுமான பணிகள் நிறைவுற்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து தெரிவிக்கையில் 2019 ஆம் ஆண்டு விசேட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு இந்த திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டிருந்த வேளையிலும் கூட நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலைகள் காரணமாக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு அரசு உள்ள நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களை வாங்கியது, பின்னர் இந்த நிலைமையை சீர் செய்ய முடியாத நிலையில் இறுதியாக பணம் அச்சிடப்பட்டது. இவ்வாறான சூழ்நிலையில் இருந்து தற்போது மீண்டு வரும் நிலையில் இந்த கட்டிடம் நிர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான சிவநேசதுரை சந்திரகாந்தன்இ மற்றும் சதாசிவம் வியாழேந்திரன், ஊடக துறை அமைச்சர் சாந்த பண்டார மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்













