
தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்டுள்ள 25 அடி உயர திருவள்ளுவர் சிலை
இந்தியாவின் கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி வீதியின் குறிச்சிக்குளம் பகுதியில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 25 அடி உயர திருவள்ளுவர் சிலையை இன்றயதினம் வெள்ளிக்கிழமை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
3 தொன் எடையில் 25 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை முழுவதுமாக தமிழ் எழுத்துக்களால் அமைக்கப்பட்டு நெற்றியில் அறம் என்ற சொல் பொறிக்கப்பட்டுள்ளது.
சிலை முழுவதும் உருக்கு இரும்பினால் உருவாக்கப்பட்டு மாலை வேளைகளில் மின் விளக்குகளால் ஔிரும் வகையில் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
52 கோடி இந்திய ரூபா செலவில் உருவாக்கப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
