
காரின் மேற்கூரையில் குழந்தைகளை தூங்கவைத்து விட்டு காரை ஓட்டிய பெற்றோர்
இந்தியாவின் கோவா மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற நபர் ஒருவர் தனது காரின் மேற்கூரையில் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் உறங்க வைத்து காரை ஓட்டிச் சென்றுள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
குறித்த இந்த காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் தொடர்பில் பலரும் தங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
கோவாவிற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் சிலரின் தவறான செயல்களினால் பல அசெளகரியங்கள் ஏற்படுவதுடன் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியிலுள்ள ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
