அயோத்தியில் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் திறந்து வைப்பு

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி நகரில் கட்டப்பட்ட புதிய சர்வதேச விமான நிலையத்தை அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

ஒரு வரலாற்று புனித நகரமான அயோத்தி, இந்துக்களால் கடவுளாகக் கருதப்படும் ராமர் பிறந்த இடமாகக் கருதப்படுகிறது.

ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவரின் நினைவாக இந்த விமான நிலையம் பெயரிடப்பட்டது.

இது அயோத்தியில் உள்ள மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் என்ற பெயரில் உள்ளது.

1,450 கோடி இந்திய ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலைய முனையம், சுமார் 6,500 சதுர மீற்றர்  பரப்பளவில், ஆண்டுக்கு 10 லட்சம் பயணிகளுக்கு விமான வசதிகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.