நடிகர் விஜயகாந்த் காலமானார்

 

பிரபல நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை அவர் இரவு 9 மணிக்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து இன்று வியாழக்கிழமை காலை அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.