நான்கு வலம்புரிச் சங்குகளுடன் ஒருவர் கைது

மன்னார் சாந்திபுரம் பகுதியில் நான்கு வலம்புரி சங்குகளை விற்பனை செய்யும் நோக்கில் வைத்திருந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் மன்னார் பொலிஸ் விசேட குழுவினர் கைது செய்துள்ளனர்.

மன்னாரைச் சேர்ந்த 60 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வலம்புரி சங்கு வைத்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்