
யாழ்.சிறைச்சாலையில் கைக்கலப்பு
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இடம்பெற்ற கைக்கலப்பில் கைதியொருவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ் சிறைச்சாலையில் இருந்த 30 வயதான கைதியே இவ்வாறு காயமடைந்துள்ளார் .
சிறைச்சாலையில் இரண்டு கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைக்கலப்பாக மாறியதில் காயமடைந்த கைதி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
